ஒரு குடும்ப தலைவன் தன் வீட்டு திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது - இடையிடையே காறி உமிழ்வதும் , பேச்சை தொடர்வதுமாக இருந்தால் , அதை கண்டு வளரும் மகனும் அப்படியே - அந்த கலாச்சாரத்திலேயே வளர்வான்.
கருணாநிதியின் மேடைப் பேச்சு கலாச்சாரம் அப்படித்தான் இருக்கும். கவர்ச்சியாக பேசுவதும் - கண்ணியமற்ற முறையில் பிறரை வசைபாடுவதும்தான் அவரது மேடை பேச்சுப் பேச்சு கலாச்சாரம். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மதுரையில் திமுகவினரால் தாக்கப்பட்ட பிறகு நடந்த வேலூர் மாநாட்டில் துரை முருகன் - கருணாநிதி போன்றோரின் பேச்சுக்கள் இதற்கு சான்று.
கருணாநிதியும் - அவரது இரு மகன்களும் செய்யும் அறிக்கை யுத்தம் அப்படித்தான் இருக்கின்றன. கருணாநிதியின் (அழகிரியும் - ஸ்டாலினும்) இரு புதல்வர்களும் தலைமை பொறுப்பை ஏற்பதற்கு சிறிதும் தகுதிப் படைத்தவர்கள் அல்ல !
தலைமை பண்பும் - சீர்திருத்த கொள்கைகளும் - இலக்கை நோக்கிய செயல் ஆற்றல் கொண்ட தலைவர்களான சுபாஷ் சந்திரபோஷ் - மகாத்மா காந்தி போன்ற தேசிய தலைவர்கள் , தங்கள் கருத்துக்களை மக்களிடையே கொண்டு செல்லும் ஆற்றலும் - கொள்கைகளிலிருந்து பிறழாமல் தேசத்தை வழி நடத்தி செல்லும் கண்ணியமும் பெற்றிருந்தார்கள்.
தலைமை ஏற்கும் பண்போ - தொண்டர்களை இலக்கை நோக்கி ஒருங்கிணைக்கும் ஆற்றலோ - ஒரு மைய கருத்தை சார்ந்த பரப்புரை செய்யும் பேச்சாற்றலோ அமைய பெற்றிராதவர்கள்தான் அழகிரியும் - ஸ்டாலினும். அவர்களிடம் அப்படி ஒரு தலைமை ஏற்று நடத்தும் வடிவமைப்பு ஆற்றல் இல்லாதது ஆச்சரியமல்ல. அவர்கள் அவ்வாறு வடிவாற்றலில் வார்க்கப்படவில்லை.
பகுத்தறிவு - கடவுள் மறுப்புக் கொள்கை - சமூக நீதி சார்ந்த சீர்திருத்தம் - பெண் முன்னேற்றம் என்பது போன்ற சமகால சமூகவியல் தேவைகளை உரிய காலத்தில் அடைவதற்காக திமுக அரசியலில் பங்கெடுப்பதாக அறிவித்தாலும் , கருணாநிதியின் சிந்தனையும் - செயலும் அவ்வாறு அமையவில்லை.
கருணாநிதியின் அறமற்ற அரசியல் போக்கும் - கண்ணியமற்ற நோக்கங்களும் கண்டுதான் அன்று ஈ வி கே சம்பத் போன்றவர்கள் தி மு க விலிருந்து வெளியேறினார்கள்.
சுய வடிவமைப்பு இல்லாத இலக்குகளும் - கண்ணியமற்ற கொள்கைகளும் கொண்ட கட்சியாக தி மு க இருப்பதினால்தான் அந்த கட்சியை தேர்தலில் காப்பாற்ற நடிகை குஷ்புவும் - நடிகர் விஜயகாந்தும் தேவைப்படுகிறார்கள் .
சென்னையில் உள்ள திமுகவினர் கூட எளிதில் அணுக முடியாதவர்தான் ஸ்டாலின். தொண்டர்களோடு நேரிடையாக பழகி கருத்தறியும் உத்தி ஸ்டாலினிடம் இல்லை. அதனால்தான் சென்னையை கடந்து அவரால் பெரும்பான்மை பெற முடியவில்லை.
மிக எளிதாக தொண்டர்களோடு பழகும் அழகிரியை சுற்றி இருப்பவர்களில் பெரும்பான்மையானோர் குற்றபிண்ணனி உள்ளவர்கள். தங்கள் குற்ற வழக்குகளிலிருந்து தப்பவும் - பயம் கலந்த செல்வாக்கினால் பணம் பறிப்பதுமான கும்பல்களோடுதான் அழகிரியின் மதுரை வட்டாரம் உள்ளது.
திமுக ஒரு உட்கட்சி ஜனநாயகம் உள்ள கட்சியாக இருந்தால் துரைமுருகன் - பேராசிரியர் அன்பழகன் போன்ற இரண்டாம் கட்ட திமுக தலைவர்களின் வாரிசுகளும் தலைமைக்கு போட்டியிடலாமே ?
பெரும்பான்மையான மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் கட்சி தலைவர்கள் , தேர்தல் முறை மூலம் ஆட்சியை கைப்பற்றும் பாதுகாப்பில்லாத ஜனநாயகமாகத்தான் தற்போது நடைமுறை உள்ளது. பாதுகாப்பான ஜனநாயகத்திற்கு வழிநடத்தலும் / அர்ப்பணிப்பு உணர்வோடும் கொண்ட தலைவர்களும் , திறமையான - நேர்மையான இளைஞர்களும் தேவை.
தமிழக மாணவர் கழகம் அந்த குறிக்கோளோடு தன் சமூக - அரசியல் பயணத்தை தொடர்கிறது.
அவனி மாடசாமி - தலைவர்
தமிழக மாணவர் கழகம்
உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய tamilagamtimes@post.com
No comments:
Post a Comment