ஒநாய்களும் - ஆட்டு குட்டியும்
2 ஜி வழக்கின் முக்கிய குற்றவாளிகள் கருணாநிதியும் - ராஜாத்தி
அம்மாளும்தான். ஆனால், இவர்கள் சட்டத்தின் படி குற்றவாளிகள் இல்லை. பின்
எந்த அடிப்படையில் இவர்கள் குற்றவாளிகள் என கூறுவது என்றால் தர்க்க ரீதியான
அறம் என்ற அடிப்படையில்தான். ( LOGICAL ETHICS ).
இந்திய
நீதிமன்றங்கள், சட்ட விதிகள் பதிவு செய்யப்பட்ட ஒரு கணினி போலத்தான்
செயல்படுகின்றன. அவ்வாறுதான் செயல்பட இயலும். தனக்குள்ளே என்ன பதிவு
செய்யப்பட்டதோ அதன் அடிப்படையில் மட்டுமே ஒரு கணினி இயங்கும். அதே போல்தான்
இந்திய நீதிமன்றங்களும்.
இந்திய சட்ட விதிகளின் ஆராய்ந்தால்
குற்றமும் சாட்சியமும் மட்டுமே புலப்படும். ஆனால் தர்க்க ரீதியான தர்மப்படி
சிந்தித்தால் ( LOGICAL ETHICS ) நீதியின் முழு பரிணாமம் புரியும். 2 ஜி
வழக்கிலும் தர்க்க தர்மப்படி குற்றவாளிகள் கருணாநிதியும் - ராஜாத்தி
அம்மாளும்தான்.
உதாரணமாக , சில வருடங்களுக்கு முன்னால்
சென்னையில் பிரபல உணவு விடுதியின் உரிமையாளர் மீது ஒரு பெண் பாலியல்
குற்றம் சாட்டி வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் தீர்ப்பில் அந்த வழக்கை
விசாரித்த நீதிபதி ஒரு வரி குறிப்பிட்டிருந்தார். " ... இந்த வழக்கில்
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிகழ்ந்த நிகழ்வுகளுக்கும் - அந்த பெண்ணின் மீது
இழைக்கப்பட்ட பாலியல் தொந்தரவுகளுக்கும் - அந்த பெண்ணின் தாயும் ஒரு
காரணமாக உள்ளார் - அந்த தாயின் தவறான வழிகாட்டுதலினால் இந்த பெண் இத்தனை
துன்பங்களையும் அடைந்துள்ளார்...." என்று குறிப்பிட்டுள்ளார். சட்டபடி அந்த
பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயை தண்டிக்க இயலாது. ஆனால் நீதிபதி எந்த
அடிப்படையில் அந்த குறிப்பிட்டார் என சிந்தியுங்கள் நண்பர்களே !
அதே போல்தான் 2 ஜி வழக்கில் கனிமொழி சிக்கியுள்ளார். மனைவி - துணைவி என்ற
குடும்பங்களை கொண்டிருக்கும் தனிநபர் ஒழுக்கமில்லாத ஒரு மனிதன் , தன் இரு
குடும்பங்களுக்குமான தன் பொருளாதார பங்களிப்பை நிறை செய்யும் பொருட்டு
செய்த செயல்தான் இத்தனை சீரழிவுக்கும் காரணம். தனது அறமற்ற ஆசைகளினால்
ராஜாத்தி அம்மாள் தனது மகளை வழக்கில் சிக்க வைத்துள்ளார்.
இந்தியாவின் பெரும் அரசியல் பலமும் - நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட ஒரு
தலைவரின் குடும்ப உறுப்பினர் நடத்தும் தொலைக்காட்சிக்கு எப்படி பணம் வந்தது
- எந்த அடிப்படையில் / யார் உதவி செய்தார்கள் என்பதனை அந்த கும்ப தலைவர்
அறியாதிருப்பாரா ? கனிமொழியின் தாய்க்கும் இது தெரியாதா ?
அறமற்ற
சிந்தனை கொண்ட அரசியல் தலைவர் - பண ஆசை கொண்ட துணைவி - தந்திரமான /
நேர்மையற்ற வணிகர்கள் இவர்களின் கூட்டு சிந்தனையின் உருவம்தான் 2 ஜி
வழக்கு.
அரசியல் மைய அதிகாரம் கொண்ட தலைவர்களின் தனிநபர் ஆசைகளை
நிறைவேற்றுவதன் மூலம், தங்களது நேர்மையற்ற வணிக தேவைகளை நிறைவேற்றும்
மலிவான உத்தி கொண்ட வணிகர்கள் கூட்டம், நமது ஜனநாயகத்திற்கு ஆபத்தான
விசயம்.
இவ்வாறு கனிமொழின் மீது வழக்கு தொடர்ந்ததால்,
இவர்களுடைய கூட்டணியில் உள்ள மத்திய அரசு இவர்களுக்கு துரோகம் செய்து
விட்டதாக இதே தலைவர் தனது கட்சியின் பொது குழுவில் தீர்மானம் இயற்றுகிறார்.
முதலில் 'துரோகம்' - 'சாணக்கியம்' - 'பகுத்தறிவு' இந்த
அவார்த்தைகளுக்கெல்லாம் கருணாநிதியின் அகராதியில் என்ன பொருள் என அவரே
விளக்கட்டும்.
ஆக, தனிநபர் ஒழுக்கமில்லாத தந்தையும் - பேராசை
கொண்ட தாயும் செய்த வினையினால் மகள் வழக்கில் சிக்கியுள்ளார் என்பதே தர்க்க
ரீதியான உண்மை. ஓநாய்களின் தந்திரத்திற்கு ஒரு ஆட்டு குட்டி
பலியாகியிருப்பது பரிதாபம்தான்.
தனிநபர் வாழ்வாதார
முன்னேற்றத்திற்கு பயனில்லாத இந்த அரசியல் குடும்ப மையங்கள் அரசியலில்
தொடர்வது நமது ஜனநாயக அமைப்பிற்கு உகந்ததா ? சிந்தியுங்கள் நண்பர்களே !
நன்றி.
அவனி மாடசாமி - தலைவர்
தமிழக மாணவர் கழகம் - tamilagamtimes@post.com
knowledgeocean2014.blogspot.com / www.tamilagamtimes.com
No comments:
Post a Comment